உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு துணைத் தேர்வு மறு கூட்டல்இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு துணைத் தேர்வு மறு கூட்டல்இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கடலூர்:பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக் சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து அரசு தேர்வுகள் கடலூர் மண்டலத் துணை இயக்குனர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக் பிரிவிற்கு கடந்த ஜூன் மாதம் நடந்த சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அவரவர் தேர்வு எழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.இன்று முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாயும், ஒருதாள் கொண்ட பாடங்களுக்கு 205 ரூபாய் வீதம் கருவூலகத்தில் செலுத்த வேண்டும்.கடலூரில் உள்ள அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகம், சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை