உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் ஜவ்வாக இழுக்கும்இந்திராகாந்தி சாலை பணி

பண்ருட்டியில் ஜவ்வாக இழுக்கும்இந்திராகாந்தி சாலை பணி

பண்ருட்டி:பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுப்பதால் சாலையில் புழுதிப்படலம் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்திராகாந்தி சாலை வழியாக லிங்க்ரோட்டில் இணையும் பகுதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நின்றதால் அடிக்கடி இந்திராகாந்தி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வந்தது.கடந்த ஆண்டு சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி சாலையில் 180 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் தரமான தார் சாலை மற்றும் இருபுறமும் வடிகால் வசதி அமைக்க 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்த பணியை கடலூர் எஸ்.ஜே.எம்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் எடுத்திருந்தது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பணியை முடிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.இதனால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்கள் கடந்த 2010 நவம்பர் மாதம் முதல் மாற்று வழிப் பாதையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஒருசில நாட்களில் வாகனங்களை இந்திராகாந்தி சாலை, லிங்க்ரோடு வழியாக திருப்பி விடும் போது புழுதி பறக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனம், குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.தற்போது மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் விரைவில் பணியை துவங்கி முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை