உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறிஞ்சிப்பாடி அருகே கோஷ்டி மோதல்5 பேர் படுகாயம்: 6 பேர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே கோஷ்டி மோதல்5 பேர் படுகாயம்: 6 பேர் கைது

குறிஞ்சிப்பாடி:குறிஞ்சிப்பாடி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செ#தனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.43;, அதே பகுதியியை சேர்ந்தவர் ஆப்ரகாம்.38;. இவர் வடலூரில் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறி இவரது மனைவி அந்தோணியம்மாள், தம்பி ராயர், உறவினர்கள் சேர்ந்து செல்வராஜ் வீட்டு முன் ஆப்ரகாமை வழிமறித்து நியாயம் கேட்டனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு திட்டிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த செல்வராஜ் எங்கள் வீட்டு முன் தகராறு செய்து கொள்ள கூடாது என கூறினார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஆப்ரகாம் அவரது தம்பி பிலவேந்திரன், எட்வின், வியாகுலதாஸ், ராபின் ஆகியோர் சேர்ந்து செல்வராஜ் உறவினர்கள் ஆரோக்யசாமி, ராணி, அந்தோணிராஜ், கிரேஷ் ஆகியோரை தாக்கினர் இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து ரயில்வே கேட் அருகே நின்றிருந்த பிலவேந்திரனை எதிர் கோஷ்டியினர் வழி மறைத்து தாக்கினர் இதில் அவர் படுகாம் அடைந்தார். இது தொடர்பாக இரு கோஷ்டிகள் அளித்த புகாரின் பேரில் 13 பேர் மீது வழக்கு பதிந்து எட்வின், ஆப்ரகாம், வியாகுலதாஸ், ஜெயராஜ், பிரான்சிஸ், ராயர் ஆகியோரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை