உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தணிக்கைத் துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தணிக்கைத் துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கடலூர்:கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த முகாமிற்கு உதவி இயக்குனர் மாசிலாமணி தலைமை தாங்கினார். திருச்சி கூட்டுறவு தணிக்கை இணை இயக்குனர் சாரதா கருத்துரை வழங்கினார். உதவி இயக்குனர்கள் ஆனந்தன், செல்வராஜ், நடராஜன், சக்திவேல், தணிக்கை அலுவலர்கள் முருகேசன், பாஸ்கரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் இறுதி தணிக்கையில் செயலற்ற ஆஸ்தி வகைபாடு, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளின்படி தணிக்கை மேற்கொள்வது.பணியாளர்களின் போனஸ் மற்றும் பணிக்கொடை ஒதுக்கீடு செய்த வங்கி ஒழுங்குமுறை சட்டம், நிதி மேலாண்மை, நிதி நிர்வாகம் பற்றிய விவரங்கள் மற்றும் தணிக்கை குறைகள் சமர்பிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை