உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தி.மு.க., ரத்ததான முகாம்

 தி.மு.க., ரத்ததான முகாம்

நெய்வேலி டிச. 8-: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 25ல் உள்ள தொ.மு.ச., அலுவலக வளாகத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதியின் 48 வது பிறந்தநாளையொட்டி, நகர தி.மு.க., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பழங்கள், சான்றிதழ், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார். ரத்ததான முகாமை கடலுார் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் வினோத், ஆய்வக நுட்பர் தேவநாதன், செவிலியர் வித்யா ஆகியோர் நடத்தினர். நகர திமுக செயலாளர் குருநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, என்.எல்.சி., - தொ.மு.ச., தலைவர் ஞானஒளி, பொருளாளர் அப்துல்மஜீத், அலுவலக செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளர்கள் பாக்யராஜ், சந்திரசேகர், தொண்டரணி ஸ்டாலின், தாமரைச்செல்வன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ