உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., பொதுக் கூட்டம்: மாநகர செயலாளர் அழைப்பு 

தி.மு.க., பொதுக் கூட்டம்: மாநகர செயலாளர் அழைப்பு 

கடலுார் : கடலுாரில் இன்று நடக்கும் தி.மு.க., பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க, மாநகர செயலாளர் ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:லோக்சபா தேர்தலை முன்னிட்டு 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற முன்னெடுப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் கடலுார் லோக்சபா தொகுதி தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று (16ம் தேதி) மாலை 4:00 மணிக்கு பொதுக் கூட்டம் நடக்கிறது.அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர் கணேசன், எம்.பி., ரமேஷ், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி முன்னிலை வகிக்கின்றனர்.அமைச்சர் சிவசங்கர் சிறப்புரையாற்றுகிறார். பொதுக் கூட்டத்தில் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாநில நிர்வாகிகள், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை