உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடன் பிரச்னையால் தோனி ரசிகர் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கடன் பிரச்னையால் தோனி ரசிகர் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திட்டக்குடி: கடன் பிரச்னையால் கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் கோபிகிருஷ்ணன்,34; அவருக்கு அன்பரசி,31; என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன், தோனிக்காக தனது வீட்டிற்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து, 'ஹோம் ஆப் தோனி பேன்' என கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.கோபிகிருஷ்ணன் செய்து வந்த பங்குச்சந்தை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த காணும் பொங்கல் விளையாட்டு போட்டியின் போது அதே கிராமத்தை சேர்ந்த சிலருடன் பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோபிகிருஷ்ணன், நேற்று அதிகாலை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் வீட்டிற்கு வந்த கோபிகிருஷ்ணனின் உடலை, அவரது உறவினர்கள் வாங்க மறுத்து, இறப்பிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் டி.எஸ்.பி., மோகன் மற்றும் போலீசார், கோபிகிருஷ்ணன் இறப்பிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை