உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத் திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம், டிசம்பர் 3 இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு அதில் பார்வையற்றவர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீட்டை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு, முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள், பகுதிநேர இசை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அனைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை