உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை

பண்ருட்டி : பண்ருட்டியில், மனைவி குடும்பம் நடத்த வராததால், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லுார் பொன்னாங்கன்னிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவன், 42; இவரது மனைவி கீதா, 36; இவர், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு, பண்ருட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில் கடந்த 4ம் தேதி, பண்ருட்டி வந்த கேசவன், கீதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். கீதா வரமறுத்ததால், வேதனையடைந்த கேசவன், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரில் கோவில் அருகே மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை