உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு  

புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு  

புவனகிரி : புவனகிரி அடுத்த அம்பலத்தடி குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடைக்களை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.மேல் புவனகிரி ஒன்றியம் கீழமூங்கிலடி ஊராட்சி அம்பலத்தடிகுப்பத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக ரேஷன்கடை கட்டப்பட்டது.இதற்கான திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழிஅன்பரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் வாசுதேவன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பொருளாளர் சுந்தர், அவைத் தலைவர் குமார், இலக்கியஅணி பேச்சாளர் தில்லைகோபி, மாவட்ட மகளிர் அணி தலைவர் லதாராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட தொழில்நுட்ட பொருளாளர் சுவாமிநாதன் முன்னிலை வைத்தனர்.பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரேஷன்கடையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் புவனகிரி ஒன்றிய இளைஞரணி செழியன், மூத்த நிர்வாகி ராமகிருஷ்ணன், துணை செயலாளர் செல்வம், முன்னாள் மாவட்ட துணை சேர்மன் முடிவண்ணன், கட்சி நிர்வாகிகள் திருஞானம், ஐயப்பன், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை