உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவ அமுதம் பள்ளியில் சாரண சிறார் பிரிவு துவக்கம்

தவ அமுதம் பள்ளியில் சாரண சிறார் பிரிவு துவக்கம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்க சிறார் பிரிவு துவக்க விழா நடந்தது.பள்ளி முதல்வர் புனிதவள்ளி தலைமை தாங்கி, சாரணர் இயக்க கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாளர் சங்கீதா முன்னிலை வகித்தார். விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்க செயலாளர் வீரப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சாரணப் பயிற்றுநர்கள் மரிய ஆரோக்கிய ராணி, குருளையர் சிறுவர்கள் பிரிவு மகேஸ்வரி, நீலப் பறவைகள் சிறுமிகள் பிரிவு மாலவி ஆகியோர் சாரணர் இயக்க பயிற்சி முறைகளை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பரமேஸ்வரி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ