உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அகரத்தில் ஜெ., பிறந்த நாள் விழா

அகரத்தில் ஜெ., பிறந்த நாள் விழா

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில், ஜெ., பேரவை சார்பில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகர செயலாளர் மாரிமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் இந்துமதி சந்தர் வரவேற்றார்.ஜெயலலிதா படத்திற்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.விழாவில், மாவட்ட சேர்மன் திருமாறன், பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், நகர அவைத் தலைவர் மலைமோகன், நிர்வாகிகள் கணேசன், சக்கரவர்த்தி, மாணவரணி சண்முகம், மீனவரணி சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி தலைமையில், நோயாளிகளுக்கு பிரட், பால், பிஸ்கட்களை, பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை