உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கண்டேஸ்வரம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருக்கண்டேஸ்வரம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான தேர்வில் வெற்றி பெற்றனர்.இந்தியா முழுவதும் மத்திய அரசு சார்பில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகையாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்துகிறது. கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த இத்தேர்வில் பல லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் கலந்து கொண்டதில், பரணி, ரக்ஷிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ