உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அனுமதியின்றி கிராவல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

 அனுமதியின்றி கிராவல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கடலுார்: கடலுார் அருகே அனுமதியின்றி கிராவல் ஏற்றி வந்த லாரியை, கனிமவளத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கடலுார் கனிமவளத்துறை உதவிஇயக்குனர் செல்வசேகர், நேற்று முன்தினம் மாலை திருப்பாதிரிப்புலியூர் பாதிரிக்குப்பம் சாலையில் கனிம வள திருட்டு நடக்கிறதா என சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே கிராவல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி கிராவல் ஏற்றி சென்றது தெரிந்தது. தொடர்ந்து, லாரி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. செல்வசேகர் புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை ஓட்டிவந்த திருமாணிக்குழியைச் சேர்ந்த வேலு,45; என்பவரை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ