உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அடுத்த கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஜமாலுதீன் மகன் மீரா உசேன், 34; இவர், நேற்று சென்னை - மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். நேற்று மாலை விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் அருகே ரயில் வந்தபோது, மீரா உசேன் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். . தகவலறிந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே போலீசார். மீரா உசேன் உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை