உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலையில் மாடுகள் உலா: வாகன ஓட்டிகள் அச்சம்

 சாலையில் மாடுகள் உலா: வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகர சாலைகளில் உலா வரும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். விருத்தாசலம் நகரில் கடை வீதி, ஜங்ஷன்ரோடு, கடலுார் ரோடு ஆகியன பிரதான பகுதிகளாகும். பெரு வணிக நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்கள் உள்ளன. தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த சாலைகளில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் உலா வருகின்றன. இவைகள் சாலையின் குறுக்கே படுத்தும், நின்று கொண்டும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும், சாலையின் குறுக்கே திடீரென ஓடும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி, காயமடையும் நிலை உள்ளது. வாகனங்கள் ஆங்காங்கே நெரிசலில் சிக்குகின்றன. எனவே, பிரதான சாலைகளில் வலம் வரும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை