உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய புள்ளியியல் துறை வினாடி வினா போட்டி

தேசிய புள்ளியியல் துறை வினாடி வினா போட்டி

கடலுார், : கடலுார் தேசிய புள்ளியியல் துறை, துணை வட்டார அலுவலகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடந்தது.கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை செந்தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். தேசிய புள்ளியியல் துறை மூலம் பல்வேறு மாதிரி கணக்கெடுப்புகள் எடுக்கப்படுவது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டி நடந்தது. தேசிய புள்ளியியல் துறை, துணை வட்டார அலுவலக முதுநிலை அதிகாரி சுரேஷ்குமார் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், புள்ளியல் துறை சார்பில் நாடு முழுவதும் பல்வேறு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, புள்ளியில் துறை சார்பில் நடத்தப்படும் கணக்கெடுப்பிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, தெரிவித்தார். நிகழ்ச்சியில் புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை