உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடக்குத்து ஊராட்சி செயலாளர் புகார்; கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு

வடக்குத்து ஊராட்சி செயலாளர் புகார்; கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு

நெய்வேலி : வடக்குத்து ஊராட்சியில் குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில், கொலை மிரட்டல் வருவதாக ஊராட்சி செயலாளர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சடையப்பன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.அதனைத் தொடர்ந்து, வடக்குத்து ஊராட்சி செயலாளர் (பொறுப்பு ) கார்த்திகேயன் பேசுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வடக்குத்து ஊராட்சியில் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறேன். மக்கள் பிரதிநிதிகள் எனக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.சில தினங்களாக எனக்கு மொபைல் போன் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என பேசினார்.இதனால், கிராம சபைக் கூட்டத்தல் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை