உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்கலம்பேட்டையில் வேளாண் மையம் திறப்பு

மங்கலம்பேட்டையில் வேளாண் மையம் திறப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில், ரூ.38 லட்சம் மதிப்பில், 110 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்பட்டது.விழாவிற்கு, விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, வேளாண் அலுவலர் சுகன்யா, துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், புதிய துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, தி.மு.க., ஒன்றிய பொருளாளர் சாமி, காட்டுப்பரூர் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஆத்மா குழு தலைவர் குமார், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் ஜெயக்குமார், மங்கலம்பேட்டை வி.ஏ.ஓ., சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை