உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், பங்குனி உத்திரப் பெருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 9:30 மணியளவில், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், கொடி மர பூஜைகள் நடந்தன.கோவில் குருக்கள்கள் வேத மந்திரங்கள் முழங்க, வெகு விமர்சையாக காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 10:15 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். வரும் 24ம் தேதி தேரோட்டம், 25ம் தேதி பங் குனி உத்திர திருவிழா நடக்கிறது. அன்று மாலை மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை