உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

சிவசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 14ம் தேதி இரவு 7:00 மணிக்கு புற்று மண் எடுத்தல், விநாயகர் வீதியுலா நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 6:30 மணிக்குமேல் 8:00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது.இதில், சிவசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை சூரிய பிரபை வாகனம் மற்றும் இரவு சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை