உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மணிமுக்தாற்றில் நீர்வரத்து மக்கள் மகிழ்ச்சி

 மணிமுக்தாற்றில் நீர்வரத்து மக்கள் மகிழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீர்வரத்து துவங்கியதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருத்தாசலம் மணிமுக்தாற்றில் கோமுகி அணையில் இருந்து விடப்படும் வெள்ள நீர் மற்றும் வேப்பூர், நல்லுார், விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள ஓடைகள், விளைநிலங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் பாய்ந்து வருவது வழக்கம். இதனை, மேமாத்துார் அணைக்கட்டில் தேக்கி வைத்து, தேவைக்கேற்ப திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், மேமாத்துார் அணைக்கட்டுக்கு நேற்று 1,000 கன அடி நீர்வரத்து கிடைத்தது. இதனை, தேக்கி வைக்காமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்படியே மணிமுக்தாற்றில் திறந்து விட்டனர். இதனால், மணவாளநல்லுாரில் 25 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டு, விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாறு மேம்பாலம் வழியாக இருகரைகளையும் தொட்டுவிட்டு செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி