உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை செயலாளர் விஜயகுமார் முகாமை துவக்கி வைத்தார். ஜி.டெக்., நிறுவன தலைவர் கார்த்திக், சென்னை, கோயம்புத்துார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரானே சென்னை லிட், டி.வி.எஸ்.சப்ளை செயின் லிட், அருணை பவர் இன்ப்ரா, சாண்ட்ஃபிட்ஸ் பவுண்டரீஸ், மயிலம் இந்தியா லிட், பெர்பெக்ட் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவன மேலாளர்கள் 152 மாணவர்களை தேர்வு செய்தனர்.அறக்கட்டளைத் தலைவர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.கல்லுாரி முதல்வர் ரமேஷ் பாபு, துணை முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். விழாவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் சரவணன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சந்திரமவுலி, துறைத் தலைவர்கள் ஜெயவீர சிவகண்டன், கார்த்திகேயன், சீனிவாசன், கந்தன், சோமு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை