உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பாலத்தில் செடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

 பாலத்தில் செடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

கடலுார்: உப்பனாற்று பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலுார் முதுநகர் உப்பானற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் தினமும் கடந்து செல்கின்றனர் . இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் ஆங்காங்கே அரச மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனை அவ்வப்போது, அகற்றாததால் அரச மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் உறுதி தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பாலத்தை கடக்கும் நிலை உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ