உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

 மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த 3 பேர் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம், மழையால் சாலையோர புளியமரம் முறிந்து, மின் கம்பத்தில் விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகில் இருந்த மரியசூசை,70; அவரது மனைவி பிளவுன்மேரி,60; அவரது அண்ணி வனதாஸ்மேரி,70; ஆகியோர் இறந்தனர். கனகராஜ் என்பவர் காயமடைந்து சிதம்பரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இறந்தவர்கள் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள், மா.கம்யூ., -வி.சி., கட்சியினர் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் கீதா பேச்சுவார்த் தை நடத்தி, மின்சார வாரியம் சார்பில் தலா 10 லட்சம், வருவாய் துறை சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறினார். வாய்மொழி உத்தரவை ஏற்க முடியாது என, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், செல்லையா, வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, தொகுதி செய லாளர் செல்லப்பன் கூறினர். இதையடுத்து தாசில்தார் கீதா, 14 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, கடிதம் வழங்கினார். காயமடைந்த கனகராஜூக்கு 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து 3 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி