| ADDED : பிப் 14, 2024 03:35 AM
மந்தாரக்குப்பம் : வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புவனகிரி எம்.எல்.ஏ., நிதியிலிருந்து பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வேணுகோபால் தலைமை தாங்கினார். வடக்குவெள்ளுர் ஊராட்சி தலைவர் மலர்விழி வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 40 பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கினார்.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் ரகுராமன், ஒன்றிய கவுன்சிலர் கலாகண்ணன், நெய்வேலி வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், கம்மாபுரம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபால கிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.