உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளிவாசல் சுற்றுச்சுவர் விழுந்ததால் சாலை மறியல்

பள்ளிவாசல் சுற்றுச்சுவர் விழுந்ததால் சாலை மறியல்

திட்டக்குடி : திட்டக்குடியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி கூத்தப்பன்குடிகாடு பகுதியில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இந்நிலையில், சுற்றுச் சுவர் அருகே பள்ளம் தோண்டியதால் விழுந்ததாக கூறி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காலை 10.20மணிக்கு திட்டக்குடி ராமநத்தம் சாலையில், முஸ்லிம்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 10.35 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை