உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் காய்கறி வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி: நாசிக் ஆசாமி கைது

கடலுார் காய்கறி வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி: நாசிக் ஆசாமி கைது

கடலுார், : கடலுார் காய்கறி வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த, நாசிக் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர் சூர்யா,39; இவரது அண்ணன் நாசிக்கை சேர்ந்த முகமது ரபீக், 42; இருவரும் வெங்காயம் ஏற்றுமதி வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, 'யூ-டியூப்' பில் விளம்பரம் செய்தனர்.அதனை பார்த்த, கடலுார் மஞ்சக்குப்பம் காய்கறி வியாபாரி முகமது மீரான்,63; சூர்யா மற்றும் முகமது ரபீக் ஆகியோரை தொடர்பு கொண்டார். அப்போது, அவர்கள் வெங்காயம் விலை குறைவாக இருக்கும் போது, கொள்முதல் செய்து குடோனில் வைத்து, விலை ஏறியதும் விற்றால் கிடைக்கும் லாபத்தில் 2 சதவீதம் போக மீதித் தொகையை அசலுடன் சேர்த்து தருவதாக கூறினர்.இதனை நம்பிய முகமதுமீரான், கடந்த 1.10.2022 முதல், 1.3.2023 வரையில், பல தவணைகளாக ரூ. 25 லட்சம் அனுப்பினார். ஆனால், அவர்கள் பணத்தை தராமல், தலைமறைவாகினர். இதுகுறித்து முகமது மீரான் அளித்த புகாரின்பேரில் கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவை ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவான முகமது ரபீக்கை, சப் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில், மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், குல்தாபாத் பகுதியில் பதுங்கியிருந்த முகமது ரபீக்கை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.கைதான முகமது ரபீக் மற்றும் சூர்யா இருவர் மீதும் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுகளில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை