உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேக பூஜை

 மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேக பூஜை

கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவாரத்தையொட்டி ஸ்ரீஅருந்தவநாயகி பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை வரும் டிச., 3ம் தேதி நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கோவில் பசுவிற்கு சிறப்பு பூஜை, ஸ்ரீஞானசித்தி விநாயகர் பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 108 சங்கு ஸ்தாபன பூஜை, ஸ்ரீஅருந்தவநாயகி மூலமந்திர யாக வேள்வி நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு யாக பூர்ணாஹூதி பூஜையுடன் 108 சங்காபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ