உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் சவுமியா எச்சரிக்கை 

 நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் சவுமியா எச்சரிக்கை 

கடலுார்: கடலுார் அடுத்த நொச்சிக்காடு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என, பசுமை தாயகம் தலைவர் சவுமியா கூறினார். கடலுார் சிப்காட் அடுத்த தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு, திருச்சோபுரம், ராசாப்பேட்டை, சித்திரப்பேட்டை, நடுத்திட்டு, அம்பேத்கர் நகர், வள்ளலார் நகர், நந்தன் நகர் உள்ளிட்ட 18 கிராம எல்லைக்கு உட்பட்ட 1,000 ஏக்கர் பரப்பில், 360 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பூங்கா அமைக்க நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே சிப்காட் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர், விவசாயம், மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சிப்காட் அருகே புதிதாக தொழிற்பூங்கா அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி நிலங்களை கையப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பசுமை தாயகம் தலைவர் சவுமியா நேற்று நொச்சிக்காடு பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், அவர் கூறுகையில், 'கடலுார் சிப்காட் தொழிற்சாலைகளால் மக்களுக்கு அதிக பாதிப்பு உள்ளது. குடிநீர், காற்று மாசுடைந்துள்ளது. விளை நிலங்களை அழித்து வரக்கூடிய தொழிற்சாலைகள் தேவையில்லை. ஏற்கனவே கடலுாருக்கு சிப்காட் உள்ள நிலையில், மற்றொரு சிப்காட் தேவையில்லை. நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலத்தை கொடுத்து விட்டு ஏமாற்றமடைந்த மக்கள் பலர் தற்போது இருக்கக்கூடிய இடமில்லாமல் உள்ளனர். நிலங்களை கையகப்படுத்த ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம். நிலங்களை கையப்படுத்தினால் தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடத்தி சிப்காட் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம்' என்றார். மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்வமகேஷ், தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைகண்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநிலக் கொள்கை விளக்க அணி தனசேகர், உழவர் பேரியக்க தலைவர் இளவரசன், மாநகர கவுன்சிலர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை