உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடந்தது. ஆலையின் செயல் ஆட்சியர் செந்தில் அரசன் ஐ.ஏ.எஸ்., தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன், துணை தலைமை பொறியாளர் ரவிக்குமார், கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, அலுவலக மேலாளர் முருகன், துணை தலைமை பொறியாளர் ரசாயனம் செல்வேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், முத்துசாமி, சிவக்குமார், அரசு தரப்பு வழக்கறிஞர் பழனிமனோகரன், அரங்கசாமி, டிராக்டர் ஓட்டுனர் சங்கம் வேல்முருகன், வெங்கடேசன், ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. ஆலை செயல் ஆட்சியர் செந்தில்அரசன் விவசாயிகளுடன் கரும்பு துண்டுகளை அரவை கலத்தில் போட்டு துவக்கி வைத்தார். இதில், செல்வம்பிள்ளை, முத்துகுமாரசாமி, துரைமணிராஜன், குமார் மற்றும் விவசாயிகள் ஆலை அலுவலர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை