உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பல ஆண்டுகளாக துார் வாரப்படாத ஏரி பலத்த மழை பெய்தும் வீண்

 பல ஆண்டுகளாக துார் வாரப்படாத ஏரி பலத்த மழை பெய்தும் வீண்

நெல்லிக்குப்பம்: பல ஆண்டுகளாக, துார் வாரப்படாததால், பலத்த மழை பெய்தும், பி.என்.பாளையம் ஏரி வறண்டு காணப்படுகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே, 100 ஏக்கர் பரப்பில் பி.என்.பாளையம் ஏரி, சுற்று வட்டாரத்தில் இது மிகப்பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரியை பல ஆண்டுகளாக, துார் வாராததால், கருவேல மரங்கள் வளர்ந்து ஏரி துார்ந்து போய் உள்ளது. ஏரி துார்வாரப்படாததால் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள், ஏரியை ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும் ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லை. பெண்ணையாற்றில் இருந்து கொங்கராயனுார் ஏரி, மேல்பட்டாம்பாக்கம் வறட்டு ஏரிக்கும், அங்கிருந்து பி.என்.பாளையம் ஏரிக்கும் தண்ணீர் வரும். ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் வந்தும் ஏரிகளுக்கு தண்ணீர் வராததால் வறண்டு கிடக்கிறது. இந்த ஏரியை துார்வார சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை