உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 3 கோவில்களில் திருட்டு கம்மாபுரத்தில் துணிகரம்

3 கோவில்களில் திருட்டு கம்மாபுரத்தில் துணிகரம்

விருத்தாசலம், கம்மாபுரம் அருகே மூன்று கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன், மாரியம்மன், வீரன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த மூன்று கோவில் கதவுகளில் இருந்த பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை மற்றும் திரவுபதியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 2 சவரன் தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.தகவலறிந்த கம்மாபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை கொண்டு, உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஒரே கிராத்தில் அடுத்தடுத்து மூன்று கோவில் உண்டியல்களை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை