உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுற்றுலா வந்த வாலிபர் பைக் மோதி பலி

சுற்றுலா வந்த வாலிபர் பைக் மோதி பலி

பாகூர் : சுற்றுலா வந்த சென்னை வாலிபர் பைக் மோதி இறந்தார்.சென்னை மயிலாப்பூர், சாந்தோம் டொமினிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நவீன், 30; பெயிண்டர். இவர், அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் தனியார் பஸ் மூலம் வேளாங்கண்ணி சுற்றுலா சென்றுவிட்டு, கடந்த 25ம் தேதி புதுச்சேரி வழியாக திரும்பினார்.புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதியில் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு, ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது, நவீன் சாலையை கடந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த பல்சர் பைக், நவீன் மீது மோதியது. காயமடைந்த நவீன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை