உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உதயநிதி பிறந்த நாள் விழா

 உதயநிதி பிறந்த நாள் விழா

கடலுார்: உதயநிதி பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலுார் எம்.எல்.ஏ., ஐயப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., துரை சரவணன், மாவட்ட பொருாளாளர் கதிரவன், தொகுதி பார்வையாளர்கள் அங்கயற்கண்ணி, சுவை சுரேஷ், விஜயன் ராமகிருஷ்ணன், சிவா,பாரிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிளைகள் தோறும் தி.மு.க., கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும், விளையாட்டு போட்டிகள் நடத்தியும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடலுார் கிழக்கு மாவட்டத்தில் நடக்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை அனைத்து தி.மு.க., நிர்வாகிகளும் தீவிர களப்பணியாற்றி சிறப்பாக செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவக்குமார், விஜயசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை