உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோவிலை இடிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை

 கோவிலை இடிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை

திட்டக்குடி: திட்டக்குடி சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்கக்கூடாது என கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். விருத்தாசலம் - தொழுதுார் (ராமநத்தம்) நெடுஞ்சாலை வழியாக தினசரி கனரக வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலை வசதியில்லாததால் இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, கடந்த ஏப்ரல் மாதம் விருத்தாசலம் - தொழுதுார் நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அதன்படி, திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் அரங்கூர் வரையிலான 10 கி.மீ., துாரத்திற்கு 70 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக சாலையோர மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் போது, அங்குள்ள கோவிலை இடிக்கக்கூடாது என கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ