உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு மையத்தை காணோம்

விளையாட்டு மையத்தை காணோம்

நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த காரையூர் ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், 64 ஆயிரம் ரூபாய் செலவில் கபடி, வாலிபால், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு 'அம்மா இளைஞர் விளையாட்டு மையம்' என்ற பெயரில் தனித்தனியே அளவீடு செய்யப்பட்டு ஆடுகளம் அமைக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தன.மையத்தை பயன்படுத்தி கிராம இளைஞர்கள், சிறுவர்கள் கபடி, வாலிபால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி, ஆடுகளத்தில் செடி, முட்செடிகள் வளர்ந்து விளையாட்டு திடல் இருக்கும் இடம் தெரியாமல் மண்டியுள்ளன. இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் திட்ட அறிவிப்பு பலகை இருக்கு... விளையாட்டு மையத்தை காணோம் என இளைஞர்கள், சிறுவர்கள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை