உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழனிசாமி கூறுவது வேடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

பழனிசாமி கூறுவது வேடிக்கை: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

கடலூர்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தில் குவைத்தில் உயிரிழந்த சின்னத்துரையின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் தான் அயலகத்துறை சிறப்பாக செயல்படுகிறது. விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் குறுவை சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்திருப்பதே எங்களுக்கு முதல் வெற்றி. இடைத்தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் ஏன் நிற்கவில்லை என்பது இன்னும் சில காலங்கள் கழித்தே தெரியும். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதியிலும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தேர்தல் நடந்துள்ளது. இதுவே மிக முக்கிய சாட்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramaniam Mathivanan
ஜூன் 16, 2024 18:32

ஓட்டுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி கொடுக்காமல் வெல்வதை தமிழகம் திமுகவிடம் எதிர்பார்க்கிறது.


கோவிந்தராஜ்
ஜூன் 16, 2024 15:49

ஈரோட்டில் பட்டியில் அடைத்தது. அமைச்சர்கு தெரியாதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை