| ADDED : பிப் 27, 2024 11:48 PM
பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் சுகாதார வளாக கழிவறைக்கான செப்டிக் டேங்க் கட்டாமல் கட்டப்பட்டதாக கணக்கு காட்டி, கான்ட்ராக்டரும், அதிகாரிகளும் பணத்தை முழுமையாக 'ஆட்டய' போட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சி.என்.பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தின் பின்புறம் துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில், சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான செப்டிக் டேங்க் கட்டப்படவில்லை.அருகில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கழிவறைக்கான செப்டிக் டேங்க்கில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுகழிவறை கட்டும் போது, அந்த கழிவறைக்கு தனியாக செப்டிக் டேங்க் கட்டுவதுடன் சேர்த்து தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் புதியதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தின் கழிவறைக்கு ஏற்கெனவே கட்டிய கழிவறையின் செப்டிக் டேங்குடன் இணைத்துள்ளனர். இந்த செப்டிக் டேங்க்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை 'ஆட்டய' போட்டது கான்டராக்டரா அல்லது அதிகாரிகளா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இதற்கு பதில் தெரிவிக்குமா?