உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை நடக்குமா? பண்ருட்டியில் பக்தர்கள் எதிர்பார்ப்பு

 காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை நடக்குமா? பண்ருட்டியில் பக்தர்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சியில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.இக்கோவில் வளாகத்தில் வரதராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான கோவில் என கூறுவதுண்டு. கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் துவங்கி 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம், மூலவர் சன்னதி கதவுகள் திறந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு என தனி அர்ச்சகர்கள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வாரத்தில் இருநாட்கள் பூஜைகள் நடந்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பூஜை நடக்கவில்லை. கோவில் வளாகம் புதர்மண்டி காணப்படுவதால் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் ராஜகோபுரம், மதில்சுவர் உள்ளிட்ட பகுதியில் வர்ணம் பூசியதோடு சரி. கதவுகள் புனரமைப்பு உள்ளிட்ட மற்ற பணிகள் ஏதும் நடக்கவில்லை. பூஜை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை