உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெனரேட்டர் திருடிய வாலிபர் கைது

ஜெனரேட்டர் திருடிய வாலிபர் கைது

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், ஜெனரேட்டர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அருகே தெற்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். அதே பகுதியில் மைக் செட் வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு இவரது வீட்டு அருகே நிறுத்தி வைத்திருந்த ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர் திருடு போனது.புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடியை சேர்ந்த ஜெயபால் மகன் சந்தோஷ், 22; என்பவர், ஜெனரேட்டர் திருடியது தெரியவந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை