உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

 வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

குறிஞ்சிப்பாடி: வயிற்று வலியால் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குறிஞ்சிப்பாடி அடுத்த ரோட்டு பொட்டவெளி பகுதியை சேர்ந்தவர் அஞ்சாபுலி மகன் அருள்பாண்டியன், 21; நெய்வேலி பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டதும் அருள்பாண்டியன் வீட்டில் மாத்திரையை தேடி பார்த்து விட்டு, அதே பகுதி ஏரிக்கரைக்கு செல்வதாக குடும்பத்தாரிடம் தெரிவித்து சென்றார். இதையடுத்து நேற்று காலை ஏரிக்கரையில் அவர் துாக்கிட்ட நிலையில் இறந்தது தெரிய வந்தது. குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை