உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மாணவர்களுக்கு அஹிம்சா பயிற்சி வகுப்பு

பள்ளி மாணவர்களுக்கு அஹிம்சா பயிற்சி வகுப்பு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி 12வது வார்டு அப்பாவு நகர் அரசு துவக்கப்பள்ளியில், மாவட்ட மஹாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில், மாணவர்களுக்கு அஹிம்சா பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். பள்ளி உதவி ஆசிரியர் கவுரி வரவேற்றார். காந்தி மன்ற தலைவர் நரசிம்மன், மன்ற கோட்பாடுகள் குறித்து பேசினார். நற்பணி மன்ற மனித வள மேம்பாட்டு தலைவர் பரமேஸ்வரன், கம்பராமாயணத்தில் தாய், தந்தையை நேசித்தல் குறித்த பகுதியை நாடகமாக நடித்து காட்டினார். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் போதை பழக்கத்தை ஒழிப்பது குறித்த நாடகத்தை நடித்து காட்டினர். மன்ற உதவி செயலாளர் புருசோத்தமன், உடல் நலம் பேணல், யோகா, தியான பயிற்சி, சுகாதாரம் குறித்து விளக்கம் அளித்தார். மன்ற செயலாளர் அண்ணாதுரை, காகிதங்கள் மூலம் மரங்கள், தோரணங்கள் வடிவமைப்பது குறித்த பயிற்சி அளித்தார். மன்ற உதவி செயலாளர் வெங்கடேசன் நடுவராக இருந்து, 'மாணவர்கள் முன்னேற்றத்துக்கு கல்வி மிக அவசியமா; பொருளாதாரம் அவசியமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கலைத்துறை தலைவர் நடராஜன் காந்திய சிந்தனைகள் குறித்த பாடல்கள் பாடி விளக்கினார். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குருபிரசாத், சுதா, கிருத்திகா ஆகியோர் பயிற்சியில் பெற்ற அனுபவம் குறித்தும், எதிர்காலத்தில் காந்திய வழியை கடைப்பிடிப்பதாக உறுதி ஏற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பேனா, நோட்டுக்கள் பரிசாக வழங்கப்பட்டன.உதவி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ