மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
8 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
8 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
8 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
8 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில், புட்டிரெட்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. நேற்று இந்த ஸ்டேஷனில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், ஏற்காடு விரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண், 22649) மற்றும் மறு மார்க்கமாக ( வண்டி எண், 22650) ஏற்காடு விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷனிலும், மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் என, ரயில்வே குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், பயணிகள் வசதிக்காக கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் ரயில்வே ஸ்டேஷனை துாய்மை வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தில், ரயில்வே குழு உறுப்பினர்கள் சிற்றரசு, சரவணன் மெய்யறிவு, சேலம் ரயில்வே அதிகாரி சக்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.சீரிய சேவைகளுடன் இயங்கி வரும்மேச்சேரி தி காவிரி கல்வி நிறுவனங்கள்தொலைநோக்கு பார்வை, துறைசார்ந்த அனுபவமிகுந்த பேராசிரியர்களுடன், சேலம் மாவட்டம், மேச்சேரியில், தி காவிரி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தி காவிரி கல்வி அறக்கட்டளையின் கீழ், தி காவிரி பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி, சுகாதார ஆய்வாளர் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி மற்றும் தி காவிரி பிசியோதெரபி கல்லுாரி, தி காவிரி பார்மஸி கல்லுாரி என தனித்தனி வளாகத்தில், ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வரும் இக்கல்வி நிறுவனத்தில், ஒவ்வொரு ஆண்டும் பன்முக திறமையுடன் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணியில் சேர்ந்து, முன் மாதிரியாளர்களாக விளங்கி வருகின்றனர்.தி காவிரி பொறியியல் கல்லுாரி, 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, பயோ மெடிக்கல், கெமிக்கல், அக்ரிகல்சர், இன்பர்மேசன் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற தனிச்சிறப்புகள் கொண்ட, 10 இளங்கலை பட்டப்படிப்பு, 6 முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது.குறைந்த கட்டணத்தில் பஸ் வசதி, இருபாலருக்கும் தனித்தனியாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட உள்விளையாட்டு அரங்குடன் கூடிய விடுதி வசதிகளுடன், சீரிய சேவைகளுடன், தி காவிரி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்குராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி-நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்தாயம்மாள் எஜூகேஷனல் டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன் சார்பில், 2000ம் ஆண்டில் தன்னாட்சி அங்கீகாரத்துடன், முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி துவங்கப்பட்டது. தாளாளராக கல்வியாளர் கந்தசாமி, செயலாளராக பேராசிரியர் குணசேகரன், இணை செயலாளராக ராகுல் ஆகியோர், பணியாற்றி வருகின்றனர். முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி முதல்வராக மாதேஸ்வரன் உள்ளார். டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசெண்ட், டெக் மஹேந்திரா, இன்போசிஸ், வோல்டெக், ரெனால்ட் நிசான் போன்ற, 85க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆண்டுதோறும், இக்கல்லுாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.சிறந்த கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கல்வித்தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, ஐ.சி.டி., அகாடமி ஆண்டுதோறும் வழங்கும் சிறந்த கல்வி நிறுவன கூட்டமைப்பிற்கான விருதை, முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி தொடர்ந்து, மூன்று முறை பெற்றுள்ளது. தேசிய அளவில், சிறந்த கல்லுாரிக்கான விருதை முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி பெற்றுள்ளது. ஆங்கில இதழ்கள் நடத்திய இந்திய அளவிலான சிறந்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி சிறப்பிடம் பெற்றுள்ளது. மேற்கண்ட சிறப்புகளுடன் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, இக்கல்லுாரி ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago