| ADDED : ஜூலை 07, 2024 05:49 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வர்ண-தீர்த்தத்தில் 2023 ஜூன், 22ல் அரூர் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்பத்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலக கட்டடம் கட்டுவதற்கு, பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து பொதுமக்ள் கூறியதாவது: நுாலக கட்டடத்தின் மேற்பகுதி சேதமடைந்ததால், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், திரு.வி.க., நகரில் உள்ள தனியார் வாடகை கட்டடத்துக்கு நுாலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, மாடியில் நுாலகம் இயங்கி வருவதால், வாசகர்கள் அவதியடைகின்றனர். இட நெருக்கடியாக இருப்பதால், புத்தகங்கள் வைத்துக்கொள்ள போதுமானதாக இல்லை. மேலும் வாசகர்கள் அமர்ந்து படிப்ப-தற்கும் இட நெருக்கடியாக உள்ளதுடன், வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. எனவே நுாலக கட்டடம் கட்டும் பணியை விரை-வாக முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.