உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி

மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி

மொரப்பூர்,:மொரப்பூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் உட்பட, 2 பேர் பலியாகினர்.தர்மபுரி மாவட் டம், மொரப்பூர் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, நைனாகவுண்டம்பட்டியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மனைவி சித்ரா, 50, மாலை, 5:35 மணிக்கு பால் கறக்க கறவை மாட்டை பிடித்து சென்றபோது, மின்னல் தாக்கியது. இதில் சித்ராவும், மாடும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.அதேபோல், மொரப்பூர் அடுத்த நவலையை சேர்ந்தவர் முனியப்பன், 42; இவர், திருப்பத்துார் ரயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரது வீடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.நேற்று மாலை, 5:45 மணிக்கு மழைத்துாரல் வந்ததால், வீட்டின் மீது ஏறி தார்ப்பாய் கொண்டு மூடியுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியதில் பலியானார். இரு சம்பவங்கள் குறித்தும், மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை