உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எலக்ட்ரிக் டூவீலர் தீப்பற்றி எரிந்து நாசம்

எலக்ட்ரிக் டூவீலர் தீப்பற்றி எரிந்து நாசம்

தர்மபுரி, பாப்பாரப்பட்டி அருகே, மேல் எண்டபட்டியை சேர்ந்த விவசாயி திருவடிவேல், 42; இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த சாமந்தி பூக்களை அறுவடை செய்தார். அதை, அவருடைய கோமாகி எலக்ட்ரிக் டூவீலரில் பாப்பாரப்பட்டியில் இருந்து, தர்மபுரி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து, தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில், ஒரு கி.மீ., துாரம் கடந்து, ராமாக்காள் ஏரி அருகே சென்றபோது, டூவீலரில் தீப்பற்றியது. இதில், திருவடிவேல் தப்பினார். தர்மபுரி தீயணைப்பு மீட்பு துறையினர் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனர். அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை