உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ராணுவ பணியில் ஈடுபடும் நபரின் பெற்றோர்களுக்கு ஊக்க மானியம்

ராணுவ பணியில் ஈடுபடும் நபரின் பெற்றோர்களுக்கு ஊக்க மானியம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட, கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், உடன்பிறக்காத ஒரே மகனை ராணுவ பணிக்கு பெற்றோர் அனுப்பி வைத்திருந்தால், அவர்களுக்கு, 20,000 ரூபாய் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது. இதேபோல், ஒரு குடும்பத்தில், 2 அல்லது 2க்கு மேற்பட்ட மகன் அல்லது மகள்களை ராணுவ பணிக்கு அனுப்பி வைத்திருந்தால், அவர்களின் பெற்றோர்களுக்கு, 25,000 ரூபாய் மற்றும் வெள்ளி பதக்கம், அவர்களின் பெற்றோர்களுக்கு தமிழக அரசால் போர்பணி ஊக்க மானியமாக வழங்கப்படுகிறது. எனவே, குடும்பத்தில் ஒரே மகன், மகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மகன், மகள்களை ராணுவத்துக்கு அனுப்பியுள்ள பெற்றோர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உரிய படிவத்தை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை