உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

பாலக்கோடு;தர்மபுரி அடுத்த பாலக்கோடு அருகே, புதியதாக டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் பஞ்.,க்கு உட்பட்ட கூசிக்கொட்டாய் கிராமத்தில் இருந்து, பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன், புதியததாக மதுக்கடை திறக்க அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து சரக்கு லாரியில் மதுபானங்களை எடுத்து வரப்பட்டதை அறிந்த பொதுமக்கள், லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, டாஸ்மக் மதுபான கடை திறப்பு கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியதையடுத்து, 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றினைந்து பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகத்திடம், இங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது என மனு அளித்தனர். இங்கு மதுக்கடை அமைக்க விட மாட்டோம் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். பின், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சமாதனமாக கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை