உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனங்களில் மேய்ச்சலுக்கு தடை உத்தரவை திரும்ப பெற கோரிக்கை

வனங்களில் மேய்ச்சலுக்கு தடை உத்தரவை திரும்ப பெற கோரிக்கை

தர்மபுரி: வனங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதித்த அறி-விப்பை, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் திரும்ப பெற வேண்டும் என, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், காடு மற்றும் மலைசார்ந்த பகுதியாக உள்ளது. இங்-குள்ள மக்கள் வனத்தில் தான் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்-றனர். தற்போது மாவட்டத்தில், 38 சதவீதம் வனப்பகுதியாக உள்-ளது. பிரதான தொழிலாக உள்ள விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தியில் தர்மபுரி மாவட்டம் பெரும் பங்களிப்பு செய்கி-றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவிரி ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயத்தில் வன விலங்-குகள் வாழ்கின்றன.இவ்விடத்தில் கால்நடைகள் மேய்ச்சல் செய்தால், வன விலங்-குகள் மூலம், நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கால்நடைகள் மேய்ச்சல் செய்ய கூடாது, மீறி செய்தால் ஆக.,1 முதல் கால்ந-டைகளை பறிமுதல் செய்து, ஏலம் விடப்படும் என, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார். இது, பன்னெடும் காலமாக பாரம்பரிய அனுபவ உரிமையை பறிக்கும் நடவடிக்கை-யாகும். இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் மேய்ச்சலுக்கு தடை செய்துள்ளது பெரும் இடர்பாடாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, வன அலுவலரின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை